கோவை மாநகர கமிஷனராக பிரதீப் குமார் ஐ.பி.எஸ். பதவியை ஏற்பு
கோவையில் புதிய போலீஸ் கமிஷனராக பிரதீப்குமார் ஐ.பி.எஸ் பதவியேற்றுக்கொண்டார்.
கோவையில் போலீஸ் கமிஷனராக தீபக் தாமோர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இதில் சென்னையில் பணியாற்றி வந்த பிரதீபகுமார் ஐ.பி.எஸ். கோவை கமிஷனராக மாற்றப்பட்டு இருந்தார.
தமிழகம் முழுவதிலும் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த தீபக் எம்.தாமோர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த பிரதீப்குமார், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியை ஏற்றுக்கொண்ட பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோயம்பத்தூர் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரமாகும் வட மாவட்டத்தைச் சேர்ந்த வட மாநிலத்தைச் சேர்ந்த அனைவரும் இங்கு ஒன்றாக சேர்ந்து பணிபுரிகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து சமாளிக்க ஆய்வுப் பணி மேற்கொண்டு அவைகளின் பிரச்சனை சரிசெய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள் : நந்தகுமார், கோவை