புதிதாக துவங்கப்படும் தொழிற்சாலைகளில் ஓப்பந்த தொழிலாளர் முறை ரத்து செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் இன்று துவங்கியது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். இன்று நடைபெறும் முதல் நாள் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியகுழு உறுப்பினர்கள் சௌந்தரராஜன், வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய குழு உறுப்பினர் வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவோம் என்ற அறிவிப்பு முறையாக நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றார். விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதிகளவில் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும், பொது வினியோக திட்டம் சிறப்பாக செயல்பட அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை தொடர வேண்டும் என்றார்.
பெட்ரோல் விலையை குறைப்பதற்காக கூடுதலாக வசூல் செய்யும் கலால் வரி,செஸ் வரி ஆகியவற்றை உடனடியாக குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கேட்டு கொண்ட அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான வருவாய்த்துறையினர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கூறனார்.
தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கூடுதலாக விவசாய கிடங்குகளை அமைக்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்குவதற்கும்,காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும் என கூட்டணி கட்சி என்ற முறையில் தமிழக அரசிடம் வலியுறுத்தபடும் என்று அவர் கூறினார்.
ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சையை உரவாக்கியுள்ளது. இதுகூறித்து பாமகவிற்கு கருத்து வித்தியாசம் இருந்தால் தலைவர்கள் அதுகறித்து வாதிபிரதிவாதம் நடத்தலாம், அனால் மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் அறைகூவல் விடுப்பது, வேறு ஒரு காரணத்திற்காக இந்து மக்கள் கட்சி அர்ஜூன்சம்பத் அறிவிப்பது தரமான அரசியல் அல்ல தரம் தாழ்ந்த அரசியல் என்றார்.பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியகுழு உறுப்பினர் சௌந்தரராஜன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி