“முதலமைச்சர் திட்டப்பணிகள் துவக்கம்” 22ம் தேதி கோவை வரும் முதல்வர் முக.ஸ்டாலின்!!
கோவை வ.உ.சி. மைதானத்தில் 22ம் தேதி தமிழக முதலமைச்சர் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
முடிவுற்ற திட்டப் பணிகள்
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,
- பொதுப்பணித் துறை,
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,
- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்
- பகிர்மானக் கழகம்,
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,
- வேளாண்மை பொறியியல் துறை,
- கூட்டுறவுத் துறை,
- பள்ளிக்கல்வித் துறை,
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.
அடிக்கல் நாட்டும் திட்டப் பணிகள்:
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,
- பொதுப்பணித் துறை,
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,
- கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள்
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,
- கூட்டுறவுத் துறை,
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,
- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
- வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கவுள்ளார்.
இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் : கார்த்திக், கோவை