சிறுமிக்கு பாலியல் தொல்லை : அடித்தே கொன்ற தாய்மாமன்!!
தென்காசி அருகே சிறுமிக்கு பாலியல் கொடுத்த முதியவரை, அந்த சிறுமியின் தாய் மாமன் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான கோபால் என்பவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.முதியவர் கோபால் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து உறவினர்களிடம் சிறுமி தெரிவிக்கவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகலப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த சிறுமியின் தாய் மாமன் மாரி பாண்டி, பாறாங்கல்லை எடுத்து முதியவர் தலையில் தொக்கி போட்டு தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த முதியவர் கோபால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் எனது உயிரைப் பறி கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தாய்மாமன் பாண்டி உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.