போலி மருத்துவர் அதிமுக மாவட்ட செயலாளர் : போலி க்ளினிக்குக்கு சீல்!!!
தருமபுரி அருகே…. அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் நடத்தி வந்த போலி க்ளினிக்கை மூடி.. அதிகாரிகள் சீல்போலி மருத்துவரான அதிமுக நிர்வாகி தப்பியோட்டம்..
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வாணியர் தெருவில் வீடு ஒன்றின் மாடியில் விஜியா என்ற பெயரில் க்ளினிக் ஒன்றினை நடத்தி வந்தார். அதிமுக தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளர் கிருஷ்ணசாமி,பி எச் எம் எஸ் அரசு பதிவு பெற்ற மருத்துவர் என பெயர் பலகை வைத்தபடி, சம்மந்தபட்ட க்ளினிக்கில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு பதிலா ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததது, அதிகாரிகளின் திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது.
தருமபுரி சரக மருந்துகள் ஆய்வாளர் சந்திரமேரி தலமையிலான மருத்துவ அதிகாரிகள் சம்மந்தபட்ட க்ளிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது மாட்டு கொட்டகை போன்ற கட்டடிடத்தில் படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும், நோயளிகளுக்கு பயன்படுத்திய ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்து மாத்திரைகள் காலி டப்பாக்கள் என சுகாதாரமற்ற முறையில் மூட்டை மூட்டையாக மருத்துவகழிவுகள் உள்ளே இருப்பது சோதனைக்கு வந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட க்ளினிக்கிலிருந்த நோயாளிகளை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்மந்தபட்ட அதிமுக நிர்வாகி கிருஷ்ணசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கும்போதே சான்றிதழ்களை எடுத்துவருவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவானார் கிருஷ்ணசாமி,இதனை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசாருக்கு அதிகாரிகள் கொடுக்க, தகவலின் பேரில் தலைமறைவான அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்மந்தபட்ட க்ளினிக்கில் இருந்த ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்து சம்மநதபட்ட க்ளினிக்கை மூடி வருவாய்த்துறை முன்னிலையில், சோதனைக்கு வந்திருந்த அதிகாரிகள் சீல் வைத்தனர்..போலி மருத்துவராக இருந்துகொண்டு, அதிமுக கட்சியில் தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளராக கிருஷ்ணசாமி வலம் வந்ததால் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இவர் மீது பல்வேறு புகார்கள் சென்ற போலீசார் இவரை கைது செய்யவில்லை…
இந்த நிலையில் போலீசாரின் கைதுக்கு பயந்து தப்பி தலைமறைவாகியுள்ளார், அதிமுக தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளர்.. கிருஷ்ணசாமிகடந்த கொரோனா காலகட்டங்களில் போலி மருத்துவரான கிருஷ்ணசாமி கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி மருத்துவம் பார்த்து கோடிகளில் வருமானம் பார்த்தது கூறப்படுகிறது. தகுதியான மருத்துவ படிப்பு எதையும் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது, உரிமமின்றி ஆங்கில மருந்துகளை பயன்படுத்திய குற்றத்திற்காக, க்ளினிக்கிற்கு மருத்துவ துறை அதிகாரிகள்.. சீல் வைத்தனர்.
செய்திகள் : நீதிராஜன், மதுரை