“பணியை செய்யாத அதிகாரியை செருப்பால் அடிக்க வேண்டும், அனுமதியுங்கள்!!” கலெக்டரிடம் மனு…
பணியை சரியாக செய்யாத அலுவலரை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரிய களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தவேலு. இவர் அரசு அதிகாரி ஒருவரை செருப்பால் அடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்கள் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும்படி நான் கடந்த வருடம் பதிவு தபால் மூலம் விண்ணபித்து இருந்தேன்.
இந்த தகவலை கோரி பெரியகளக்கோட்டூர் கூட்டுறவு வங்கி தலைவர், வங்கிச் செயலாளர் உள்ளிட்டோரை குறிப்பிட்டு விண்ணபித்து இருந்தேன். ஆனால் இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை.இதன் காரணமாக தகவலை கேட்டு சரியான இடைவெளியில் மேல்முறையீட்டு மனுக்களையும் அனுப்பி வருகிறேன்.
ஆனால் அதுத் தொடர்பான தகவல் இல்லை எனக் கூறுகிறார்கள்.இப்படி பதில் அளிக்கும் அதிகாரி யார் என்ற தகவல் எனக்கு வேண்டும். மேலும் குறிப்பிட்ட அதிகாரிகளை என்னைப் போன்ற மனுதாரர்கள் செருப்பால் அடிக்க அனுமதி வழங்க வேண்டும். இதுத் தொடர்பான சட்டத்தை இயற்ற உச்ச நீதிமன்றத்திற்கும் சட்ட அமைச்சகத்திற்கும் பரீசிலனை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த மனு வைரலாகி வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலக்கம் அடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.