விஷ ஊசி செலுத்தி அரசு மருத்துவர் தற்கொலை !! காரணம் என்ன??
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உடலைகைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது 34, இவர் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினி இவரும் மருத்துவராக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது…
மருத்துவர் மகேஸ்வரன் கடந்த 3 வருடங்களாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று 24 ஆம் தேதி மாலை 4:15 மணி அளவில் தனது இனோவா காரில், கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவருடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்காக வந்துள்ளார். ஹோட்டலில் அவருக்கு அறை எண் 811 ஒதுக்கப்பட்டு அந்த அறையில் சென்று தங்கியுள்ளார்…
அதன் பிறகு கார் ஓட்டுநர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவருடன் ராயப்பேட்டையில் பணிபுரிந்து வந்த வினோத் என்ற மருத்துவர் மகேஸ்வரனின் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது பேசாததால் கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவரிடம் அவரைப் பற்றி கேட்டபோது, சவேரா ஹோட்டலில் தங்கியிருப்பதாக அவர் தகவல் தெரிவித்தவுடன் ஹோட்டலுக்கு வந்து அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர் ஆனால் கதவை திறக்கவில்லை…
கதவு உள்புறமாக தாழிடப்
பட்டிருந்ததால், உடனே ஓட்டல் நிர்வாகத்தின் மேலாளரை அழைத்து கதவு பூட்டப்பட்டு இருப்பதாகவும் திறக்க வேண்டும் என்றும் சொன்னவுடன், அந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த
போது, அறையின் வலது புறம் படுக்கையில் படுத்த நிலையில் மகேஷ்வரன் இறந்து கிடந்ததார். அவரது இடது கையில்ஊசி குத்தப்பட்ட நிலையில்
குளுக்கோஸ்பாட்டில்
மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டு இருந்தது…
அவர் அருகில் ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள், கிடந்தன. உடனே ராயப்பேட்டை காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பிரேதத்தை
அரசு ராயப்பேட்டை மருத்துவமனை பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்க அனுப்பி வைத்தனர்.
இறந்து போன மகேஸ்வரன் என்பவர் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது…
தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, யாரையும் துன்புறுத்த வேண்டாம் என கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் இறந்த மகேஸ்வரன் எதற்காக இறந்தார், குடும்ப பிரச்சனையா? இல்லை பணிசெய்யும் இடத்தில் அழுத்தம் தரப்பட்டதா? வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்…
செய்திகள் : ஜெயகுமார், சென்னை