மருந்துக்கு பணம் கேட்டதால், தாக்கிவிட்டு கடையில் கொள்ளையடித்த கூலிப்படை !!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு பணத்தை கேட்டால் கூலிப்படையை வைத்து தாக்கிவிட்டு கத்தியை காட்டி மிரட்டல் நகை பணம் பறித்து சென்றதாக புகார். இந்த சம்பவத்தில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை…
சென்னை கூடுவாஞ்சேரி ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி வயது 35 இவர் அகர்வால் பார்மா என்ற பெயரில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலை 4 மாதமாக நடத்தி வருகிறார். இவர் கீழ்ப்பாக்கம் வெள்ளாள தெருவில் பிளாஸ்மா பார்மா என்ற பெயரில் மருந்து மாத்திரை வியாபாரம் செய்து வரக்கூடிய வினோத்குமார் சோமாரியிடம் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளார்…
இந்நிலையில் பணத்தை கொடுக்காமல் வினோத்குமார் சோமாரி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பணத்தை கேட்க தமிழ்மணியின் தந்தை சதாசிவம் வயது 65 என்பவர் வினோத் குமாரை சந்திக்க கீழ்ப்பாக்கம் வந்தபோது, அவர் இல்லை என்று தெரியவர அங்கிருந்த 35 வயது மதிக்க தக்க நபர் வினோத்தை காட்டுவதாகசதாசிவத்தை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று GE கோயில் தெருவில் வைத்து படடப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி முகத்தில் தாக்கிவிட்டு அவர் கையில் அணிந்திருந்த ஒரு சவரன் மோதிரம் மற்றும் கைகடிகாரம், பணம் 1000 ரூபாய் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு போலீசில் கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்…
இதுதொடர்பாக தமிழ்மணி தந்தை சதாசிவம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வினோத் குமார் சோமாரி அவரது தந்தை தேவ்குமார் சோமாரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த நபர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்…
செய்திகள் : ஜெயகுமார், சென்னை