பொள்ளாச்சி ஆழியார் அணையில் 3 லட்ச மீன் குஞ்சுகள் !!
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் வளர்ப்பதற்காக 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில்
தமிழ்நாடு அரசு மீன் வளர்ச்சி கழகத்தின் மீன் விதைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் பருவத்திற்கு ஏற்ப ஆழியார் அணையில் விடப்படுகின்றன. அவை வளர்ந்ததும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற ரக மீன் குஞ்சுகளே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போதைய பருவத்திற்கு ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதென தமிழ்நாடு அரசு மீன் வளர்ச்சி கழகம் முடிவு செய்தது.
அதன்படி உற்பத்தி செய்யப்பட்ட மீன் குஞ்சுகளை ஆழியார் அணையில் விடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆழியார் மீன் வளர்ச்சி கழக மேலாளர் மாசிலாமணி, கோயம்புத்தூர் விற்பனை பிரிவு மேலாளர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் இப்பணிகள் நடந்து வருகின்றன.
தொடர் மழை காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீன் குஞ்சுகள் விடப்படுகிறது என்றும், 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்படுவதால் இனப்பெருக்க காலத்தில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் : ஜெகன், பொள்ளாச்சி.