செய்திகள்

சுங்கச்சாவடியில் அடாவடித்தனம் : 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

சுங்கச்சாவடியில் அடாவடித்தனம் : 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண வசூலை கண்டித்து சுமார் 1000க்கும் மேற்பட்ட திருமங்கலம் தொகுதி மக்கள்போராட்டம் நடத்தினர்.


திருமங்கலம் தொகுதி மக்கள் கப்பலூர் சுங்க சாவடி அடாவடி தன கட்டன வசூலை கண்டித்து நேற்று சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்டோர் சுங்க சாடியை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சட்ட விதிமுறைகளின்படி நகர்புறம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பத்து கிலோமீட்டர் தள்ளி சுங்கச்சாவடி அமைப்பது சட்ட விதி ஆகும் .அதனை மீறி தேசிய நெடுஞ்சாலை துறை சுங்க கட்டணம் வசூல் மையத்தை திருமங்கலம் நகர் பகுதியில் அமைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் மாதத்திற்கு ஒரு முறை கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் தொகுதி மக்கள் மற்றும் பேரையூர் தாலுகா மேலும் ராஜபாளையம் சுங்க சாவடி வழியாக கடக்க வெறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலையில் ராஜபாளையம் பகுதி ஓட்டுநர் நல சங்கமும் போராட்டத்தில் பலமுறை ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தலையிட்டு திருமங்கலம் பேரையூர் கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்று வந்தது .பின்னர் தற்போது எடுத்துள்ளார் சுங்க சாவடி ஒப்பந்ததாரர் மீண்டும் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் அனைத்தும் சுங்கக் கட்டணம் செலுத்தி போக வேண்டும் என்று கட்டாயமாக அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் திருமங்கலம் தொகுதி வாகன ஓட்டுநர் நல சங்கம் வாகன உரிமையாளர் நலசங்கம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இன்று போராட்டத்தை அறிவித்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையிலிருந்து கன்னியாகுமரி கேரளா சென்னை போகக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது .

மேலும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது இப்பகுதி மக்கள் திருமங்கலம் நகரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடியை வைத்துக்கொண்டு எங்களது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது அடிக்கடி சென்று வரும் பொழுது தினமும் சுங்கக் கட்டணம் செலுத்தி செல்வதற்கு சுமார் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வேண்டும் எங்களது உழைப்பின் பணமே ஒரு நாளைக்கு 500 ரூபாய் மட்டுமே இதனை சுங்கக் கட்டணத்தை செலுத்தி செல்ல முடியுமா என்ற கேள்வியை திருமங்கலம் தொகுதி மக்கள் கூறுகின்றனர் .

இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என கூறியிருந்தனர் .அப்பொழுது சுங்க சாவடி மேலாளர் சரி என்று கோரி பின்னர் திரும்பவும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் போராட்டம் நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின் த்பிருமங்கலம் தொகுதி மக்கள் கோரிக்கையை கேட்டு அதன் அடிப்படையில் சுங்க சாவடி நிர்வாக மேலாளர்ரிடம் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் இதற்கான தீர்வை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டுசென்று இதற்கு முழு தீர்வு பெற்றபின் சுங்க கட்டணம் கட்டுவதா இல்லையா என்பதை உறுதி செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு உறுதியானால் மட்டுமே திருமங்கலம் தொகுதிக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பை மதுரை மாவட்ட ஆட்சியர் ஒப்புதலோடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே திருமங்கலம் தொகுதி மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்களும் போலீசார் மத்தியில் கோரிக்கை வைத்த பின்னர் .

இக்கோரிக்கை இடையூறாக சுங்கச்சாவடி கட்டண வசூலை தற்பொழுது நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது .
இந்த திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சுங்க சாவடி அத்துமீறல் அடிதடி போன்ற சுமார் பத்துக்கும் மேற்பட்ட வழக்கு விசாரணை மேற்கொண்டுள்ளது. காவல்நிலையத்தில் உள்ளன மேலும் அடிக்கடி இந்த சுங்கச்சாவடியில் அடிதடி வன்முறை சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முழுமையான தீர்வு தமிழக அரசு முதல்வர் எடுக்க வேண்டும் என்பதை திருமங்கலம் தொகுதி மக்கள் கோரிக்கையாக முன் வைத்துள்ளனர் .மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக முதல்வர் திரு மு .க.ஸ்டாலின் அவர்கள்சுங்கச்சாவடி அகற்றுவதாக தேர்தல் வாக்குறுதி பிரச்சாரமாக திருமங்கலம் தொகுதியில் செய்தது குறிப்பிடத்தக்கது .இதை செயல்படுத்தவும் தற்போது தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இப்பகுதி மக்களும் வாகன ஓட்டுநர் உரிமையாளர் நலசங்கம் கூறியுள்ளது.

மேலும் திருமங்கலம் தொகுதியில் அனைத்து வாகனமும் சென்று வரக்கூடிய 208 சலையை தரவேண்டும். இல்லையெனில் பெரும் போராட்டம் நடைபெறும் என இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

செய்திகள் : நீதிராஜன், மதுரை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button