பாலியல் புகார் தாளாளர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்!! 3 நாட்கள் விசாரிக்க அனுமதி….
திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை திண்டுக்கல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
திண்டுக்கல் சுரபி கேட்டரிங் கல்லூரி தாளாளர் இருப்பவர் ஜோதிமுருகன். இவர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்தார். அப்போதுதிண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வந்தனர்.இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். இதனால் அவர் மூலம் ஜோதிமுருகன் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டிருந்தனர்.
அதேநேரத்தில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் திருவண்ணாமலை மாவட்ட சிறையில் இருந்து திண்டுக்கல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜோதி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார் இதையடுத்து போலீசார் ஒரு வாரம் அவரை காவலில் வைத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு குறித்து நீதிபதி விசாரணை நடத்தினார். இதை எடுத்து ஜோதிமுருகனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்