ஏடிஎம் கார்டு பரிமாறி நூதன திருட்டு !!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த. அய்யாதேவர்மகன் ஜெயராஜ் கடந்த ஜூலை மாதம் மதுரை ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் அவருக்கு பணம் எடுத்து தருவது போல் நடித்து ஜெயராஜ் ஏடிஎம் கார்டை மாற்றி வைத்துக்கொண்டு அந்த வாலிபர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.
பின்னர் ஜெயராஜ் உடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூபாய் இரண்டரை லட்சம் எடுத்துள்ளார் .
இதனை அறிந்து இதுகுறித்து ஜெயராஜ் உசிலம்பட்டி நகர் போலீசாரிடம் புகார் செய்துள்ளார் .புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் அந்த ஏடிஎம் கார்டு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் டெல்லி கணேஷ் வயது 31 என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்து விசாரணை செய்தனர் . விசாரணையில் ஏடிஎம் கார்டு மூலம் பல்வேறு கடைகளில் 2..50 லட்சம் ரூபாய்க்கு தங்க காசுகளை வாங்கி பதுக்கி வைத்தது தெரியவந்தது. பதுக்கி வைத்த தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற பல்வேறு இடங்களில் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் தங்களுடைய எ.டி.எம் கார்டை யாரிடமும் கொடுக்க வேண்டாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியவில்லை என்றால் ஒவ்வொரு ஏடிஎம் மையத்திற்கு காவலாளியை வங்கி மூலமாக் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அவர்களிடம் கேட்டு தங்களது ஏடிஎம்மில் இருப்பு தொகை அறிந்து கொண்டும் எடுத்து தொகை தெரிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
செய்திகள் : நீதிராஜன், மதுரை