தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை கடற்படை!! மத்திய அரசின் துரித செயல் – அண்ணாமலை
அக்டோபர் 13ஆம் தேதி நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை வந்துள்ளனர். இதனை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த நம்முடைய 23 மீனவ சகோதரர்கள், இலங்கை கடற்படையால் Oct 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள்.
நம்முடைய மத்திய அரசினுடைய சீரிய முயற்சியால் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை 18 சகோதரர்கள் சென்னை வந்து அடைந்திருக்கிறார்கள்!மீதம் 5 சகோதரர்கள் Covid காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்! மீனவர் அணி, தலைவர் சதீஷ் அவர்கள் இன்று காலை அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார்கள்!எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய திரு. நரேந்திரமோடி அவர்கள் அரசு தான் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த நம்முடைய 23 மீனவ சகோதரர்கள், இலங்கை கடற்படையால் Oct 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள்.
— K.Annamalai (@annamalai_k) November 27, 2021
நம்முடைய மத்திய அரசினுடைய சீரிய முயற்சியால் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை 18 சகோதரர்கள் சென்னை வந்து அடைந்திருக்கிறார்கள்!@DrSJaishankar
1/2 pic.twitter.com/AGgMddKsJz