போதை சும்மா ஜிவ்வுன்னு ஏறுச்சா.. இப்ப தெளிவா தெரியுது இது ஜெயில்லுன்னு!!
குடிபோதையில் வாகனத்தை இடித்து விட்டு காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய காவலர் திரு. பராக்கிரம பாண்டியன் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது கூலக்கடை பஜார் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை TN 76 D 6777 என்ற கார் குடிபோதையில் இடித்து விட்டு நிற்காமல் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அதனைப் பின்தொடர்ந்து சென்று மவுண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே காரை நிறுத்தி காரிலிருந்த சுரேஷ் என்ற நபரை விசாரணை செய்து கொண்டிருந்தபோது, அங்கு TN 76 AH 5135 என்ற இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்ற நபரும் சேர்ந்து காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமான வார்த்தைகளால் பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து காவலர் திரு. பராக்கிரம பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.கற்பக ராஜா அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி கீழப்புலியூர் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவரின் மகன்களான சுரேஷ் (35) மற்றும் கண்ணன் (34) ஆகிய இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.