செய்திகள்

தமிழக முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது!!

தமிழக முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி.

இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர் ஆவார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது வனத்துறை, மின்சாரத்துறை, பள்ளியில் உள்ள ஆய்வகம், ரேஷன் கடை, கால்நடைத்துறை மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி பணம் பெற்றிருக்கிறார்.

ஆனால், பணத்தை வாங்கிய மணி, சொன்னபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 13 லட்சம் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை;

கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் கைதுஇந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மற்றும் அதிமுகவை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் மீது (IPC 420 , 120-B) மோசடி மற்றும் கூட்டுச்சதி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று அதிகாலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியை சேலம் எஸ்பி தலைமையிலான சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது (Policer Arrest) செய்திருக்கின்றனர்.

இவர் நடுப்பட்டி மணி என்றும் அறியப்பவர். இந்த கைது விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினரின் தவறுகளை கண்டறிந்து தற்போதைய திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் கைது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகள் : எம்.ஆர். கிருஷ்ண பிரபு, மதுரை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button