தனக்கு அதிகாரம் வேண்டாம், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மான் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.. அந்தவகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 83-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது ஏழைகள் தரமான மருத்துவ சேவையைப் பெற உதவும் இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியுடன் மோடி உரையாடினார். மேலும் ” நான் அதிகாரத்தை தேடவில்லை, மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்..” என்று பிரதமர் கூறினார்.இயற்கையின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசிய போது , ” நாம் இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் தூய்மையை அழிக்கும்போது மட்டுமே இயற்கையால் நாம் அச்சுறுத்தப்படுகிறோம்..
இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்குமான வாழ்க்கை முறைகளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம்” என்று அவர் கூறினார்.1971 போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு விழாவை அடுத்த மாதம் கொண்டாடுவது குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் பேசினார்..
அப்போது “இன்னும் 2 நாட்களில், டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. நாடு கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி தினத்தை கொண்டாடுகிறது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் பொன்விழா ஆண்டையும் டிசம்பர் 16ஆம் தேதி நாடு கொண்டாடுவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் நான் நமது பாதுகாப்பு படைகளை நினைவுகூர விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை