அண்ணா பிறந்தநாளில் நீண்ட கால சிறைவாசிகள் விடுவிக்கப்படுவார்களா?
சிறையில் உள்ள 7 தமிழர்கள் உள்பட நீண்டகாலம் சிறையில்
உள்ள இஸ்லாமியர்களையும் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, திண்டுக்கல் பேகம்பூர் பொதுமக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் 10 ற்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆட்சியருக்கு “அண்ணா பிறந்த நாளில் சிறையில் உள்ள 7-தமிழர்கள் உட்பட இஸ்லாமியர்களையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும்” என மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்லாமிய ஒருங்கிணைப்பாளர் ஹபீபுல்லா ” 7-தமிழர்கள் உட்பட சிறையில் உள்ள இசுலாமியர்களையும் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும். கடத்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்ததன் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகள் வாக்குறுதியாகவே இருக்கிறது. எனவே இன்று இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துவருகிறோம். உச்சநீதி மன்றத்தில் விடுவிக்க கோரியும் அரசு விடுவிக்க மறுக்கிறது .எனவே அவர்களை விடுவிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
செய்திகள் : ரியா, திண்டுக்கல்.