திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் கார் தீப்பற்றி எரிந்தது…
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். தி.மு.க. பிரமுகர். நேற்று மாலை இவர் தனது காரில் ஆர்.எஸ். ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். கணேஷ் தியேட்டர் அருகே சென்ற போது திடீரென காரின் முன்பக்கத்தில் புகை கிளம்பியது.
சிறிது நேரத்தில் காரில் தீப்பற்றியது. இதைப்பார்த்த டிரைவர், உடனே காரை சாலையோரத்தில் நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்து ஜெயராமனும், டிரைவரும் வெளியே வந்தனர். பின்னர் காரில் இருந்த பேட்டரியை டிரைவர் வேகமாக அகற்றினார். ஆனால் அதற்குள் தீ கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக காரில் தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
காரில் தீப்பற்றியதுமே வெளியேறியதால் தி.மு.க. பிரமுகர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்