வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் கைவரிசை – போலீஸ் வலைவீச்சு
திண்டுக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
திருட்டு சம்பவம் நடந்தபோது பெண்ணின் கணவரிடம் துணிச்சலாக பேசிய கொள்ளையர்கள்.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக பணியாளராக வேலை செய்து வருகிறார்.இவரது வீட்டில் தற்பொழுது மராமத்து பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று துரை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.இதனை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு அளவு எடுக்க வந்துள்ளதாக என தெரிவித்துள்ளனர் .
இதனை நம்பிய துரையின் மனைவி வீட்டிற்குள் அந்த நபர்களை அனுமதித்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர்கள் அவரது மனைவியை கத்தியை காண்பித்து மிரட்டி
சோபாவில் கட்டி போட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் வீட்டின் உரிமையாளர் துரை செல்போனில் தனது மனைவியை தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த செல்போனில் பேசிய திருட்டு கும்பல் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டோம். உங்களது மனைவியை எதுவும் செய்யவில்லை என மிரட்டியுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த துரை வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அந்த கொள்ளை கும்பல் வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி விட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட துரை திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள இ.பி.காலனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : ரியா, திண்டுக்கல்