தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் மட்டும் 107 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேருக்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் உள்ள ஊரடங்கு ஊரடங்கு நாளையுடன் முடிவரையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமலில் உள்ள கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு வரும் டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை