திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமாவால்
கீழ்கண்ட விழிப்புணர்வுகளை பள்ளி மாணவர்களுக்கிடையே, ஜோலார்பேட்டை சந்திப்பு மற்றும் ரயில் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது.
1.ஏடிஎம் கார்டு, KYC இணைப்பு எனக்கூறி ஏமாற்றுவது
2.பேஸ்புக் மூலம் ஏமாற்றுவது
3.சமூக வலைதளங்களில் ஆஃபர் மூலம் பொருட்கள் கொடுத்து ஏமாற்றுவது
4.போலியான இணையதளங்களில் க்யூ ஆர் ஸ்கேன் செய்ய சொல்லி பண மோசடி செய்வது
5.குலுக்கல் பரிசு விழுந்துள்ளது, லாட்டரி விழுந்துள்ளது என்று மெசேஜ் லிங்க் மூலம் ஏமாற்றுவது
6.ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடுவதன் மூலம் பண இழப்பு ஏற்படுவது
7.போலி நிறுவனங்கள் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தருவதாக கூறிய மாற்றுவது
8.முகநூலில் நட்பு வட்டாரங்கள் போல் போலியான பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றுவது
9.குறைந்த வட்டியில் அதிக பணம் தருவதாக லோன்ஸ் ஆக்ஷன் ஆகி இருப்பதாக கூறி கமிஷன் செலுத்தும்படி கூறி ஏமாற்றுவது
10.முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து OTP வாட்ஸ்அப் பின் நம்பர் இவற்றை கொடுப்பதன் மூலம் வாட்ஸ்அப் ஹேக் செய்து ஏமாற்றுவது
11.குறைந்த விலையில் கொரோனா சிகிச்சை கொடுப்பதாக கூறி பேங்க் அக்கவுண்ட் டீடைல் கேட்டு ஏமாற்றுவது
12.ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது முன்பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு கொடுத்தால் டூப்ளிகேட் கார்டை நம்மிடம் கொடுத்து ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து ஏமாற்றுவது
13.ராணுவத்தில் பணி புரிவதாக போலியான ஐடி கார்டை OLX இல் அப்லோட் செய்து ஏமாற்றுவது
14.கொரோனா நிவாரண தொகை தங்கள் வங்கியில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறி ஏமாற்றுவது
15.முன்பின் தெரியாத எண்ணில் இருந்து உங்களை தொண்டு நிறுவன பொறுப்பாளராக நியமனம் செய்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா ஏமாற்றுவது
16.பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறி ஏமாற்றுவது
17.புகழ்பெற்ற நிறுவனத்தின் பெயரில் உங்களிடத்தில் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி ஏமாற்றுவது
18.முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்கள் மூலம் ஆபாச வீடியோக்களை ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் ஏமாற்றுவது.ஆகிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டது.
சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில் https://www.cybercrime. பதிவு செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றியும் நோட்டிஸில் குறிபிடபட்டுள்ளது