செய்திகள்

கோவிட்‌‌‌ போர்‌‌‌வீரர்‌‌‌கள்‌‌‌ குறும்பட போட்டியில் கோவைக்கு மூன்றாமிடம் மாவட்‌‌‌ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற கோவை மாவட்ட காவல் துறையினரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர்.சைலேந்திர பாபு, இ.கா.ப., , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும்
“POLICE AS A COVID WARRIOR” என்ற தலைப்பில் மாநில அளவில் குறும்படப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் அனைத்து மாவட்ட காவல் துறையினரும் கலந்து கொண்டனர். இப்போட்டியின் முடிவு (29.10.2021) வெளியிடப்பட்டது. இக்குறும்படப் போட்டியில் கோவை மாவட்ட காவல்துறையினர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர்.

இக்குறும்படத்தை சிறப்பாக தயார் செய்த காவல் துறையினர் மற்றும் இக்குறும்படத்தை சிறந்த முறையில் உருவாக்க பங்களித்த நபர்களை இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button