மழைநீர் சேமிப்பில் உலக சாதனை: உலகச் சாதனை அமைப்புகள் பாராட்டு…
திண்டுக்கல் மாவட்டம் மழை நீர் சேமிப்பில் உலக சாதனை புரிந்துள்ளது. உலக சாதனை அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.
திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், மாவட்ட முழுவதும் 600 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்டன.
இதில் 445 கிராமங்களின் அரசாங்கக் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகளில் 21 நாட்களில் அதாவது, 30.11.2021-ஆம் தேதிக்குள் 605 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்தப் புதிய முயற்சியை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA – LLC), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது.
21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கிய உலக சாதனை செய்தமைக்கு கலெக்டர் விசாகனிடம் நான்கு உலக சாதனை சான்றிதழ், பதக்கமும் வழங்கப்பட்டது. இதேபோல கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமாரிடமும் வழங்கப்பட்டது.
சான்றளிக்கும் உலக சாதனை விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன்
எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அமீத்ஹிங்க்ரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அம்பாசிடர் டாக்டர் செந்தில்குமார், முனைவர் சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மூத்த சாதனை பதிவு மேலாளர் ஜெகநாதன், ரெக்கார்டு மேலாளர் கார்த்திக் ராஜ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த பதிவு மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்