சாலை கடக்க முயற்சி : பேருந்தில் தலை நசுங்கி பலி!!
திண்டுக்கல்லில் சாலையை கடக்க முயன்ற நபர் எதிர்பாராத விதமாக பேருந்து சக்கரத்தில் விழுந்தது தலை நசுங்கி பலிதிண்டுக்கல் நிலக்கோட்டை கரியாம்பட்டி சேர்ந்தவர் சுப்பிரமணி.
இவர் இன்று நிலக்கோட்டையில் இருந்து சொந்த ஊரான ராஜக்காபட்டி பேருந்தில் பயணம் செய்து வந்தார் அப்போது நாகல்நகரில் மாற்று பேருந்தில் ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சாலையை கடக்க முயன்ற நபர் பேருந்து சக்கரத்தில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்