அரசியல்செய்திகள்

திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக ஆகவேண்டும்

சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வட்டச் செயலாளர் தமீம் அன்சாரி ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று 10 பேருக்கு தையல் எந்திரம், இஸ்திரி தொழிலாளருக்கு 7 பேருக்கு இஸதிரி பெட்டி, மூன்று மாற்றுத்திறனாளிக்கு மிதிவண்டி மற்றும் அரிசி,ஸ்கூல் பேக், புத்தாடைகள் என சுமார் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இதனைதொடர்ந்து மேடைப்பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது,சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பம்பரமாக சுழல்கிறார். தொகுதிக்காக ஏன் இவ்வளவு உழைக்கிறீர்கள் என கேட்டதற்கு, 7 நாட்கள் தான் எனக்காக நான் வாக்கு சேகரித்தேன். ஆனால் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறவைத்தனர். அதனால் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும் 233 தொகுதிளில் உள்ள மக்களும் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள மக்களை பார்த்து பொறாமை படுகின்றனர். அந்த அளவிற்கு உதயநிதி இந்த தொகுதிக்கு பணியாற்றி வருகிறார். குறிப்பாக இந்த ஒரு தொகுதிக்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுமைக்கும் பணியாற்றுபவராக விரைவில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற வேண்டும் என்றார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தது.. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அவருடைய பிறந்தநாளை, எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் ஏழை,எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்றார். மேலும் 234 தொகுதிகளும் பயன்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மாறவேண்டும் என்று மேடையில் பேசினீர்கள் அவர் எப்படி மாற வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேள்விக்கு, ‘நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் நினைப்பது, எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்யும்போது, அவர் உயரிய பதிவிற்கு சென்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயனுள்ளதாக இருப்பார் என்ற எண்ணம்தான் உள்ளது என தெரிவித்தனர். மேலும் அந்த வகையில் தான் ஒரு அமைச்சராக மட்டுமல்லாமல் சிறுவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிற, உற்ற நண்பனாகவும் சொல்கிறேன், அவருடைய தாத்தா மற்றும் அப்பா அவர்களுடைய ஜீன், மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கம் அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தான்- நான் வெளிப்படுத்தினேன் என்றார். மேலும் துணை முதல்வர் என்ற பொறுப்பா என்ற கேள்விக்கு, அடுத்தகட்டமாக அமைச்சராக வேண்டும்’ என்று பதில் அளித்தார்.புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய வாய்புள்ளதா என்ற கேள்விக்கு?? இது தொடர்பாக முதல்வர் மருத்துவ நிபணர்களுடன் ஆலோசித்து வருகிறார் ஆலோசனைக்கு பிறகு அவர் அறிவிப்பார் எனறார். பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர், பெற்றோர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றார். இன்னும் நான்கைந்து மாதத்தில் பொதுத்தேர்வு என்பது வரை இருப்பதால் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராம மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மோசமான கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களை அமர வைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button