மோடியை புகழ்ந்ததால் பிஹெச்டி பட்டம் பறிப்பு : முஸ்லீம் பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!!
உத்திர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 200 வது ஆண்டு விழாவில் இணையவழியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் செய்தித் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பேட்டி எடுத்தது. அதில் பேசிய ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். இது ஒளிபரப்பானதும், பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் டேனிஷ்ரகீமை அழைத்து, பிரதமர் மோடியை மீடியாவில் புகழ்ந்து பேசியது நமது பல்கலைக்கழகத்தின் கலச்சாரத்திற்கு எதிரானது. நீ புகழ்ந்து பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பலனை நீ அனுபவித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியதாக, மாணவரான டேனிஷ் ரகீம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதனிடையே, ரஹீமின் குற்றச்சாட்டை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. விளம்பர மற்றும் விநியோக மொழி” பிரிவில், பிஹெச்டி பட்டம் வழங்குவதற்கு பதிலாக, தவறுதலாக “மொழியியல்” பிரிவில் வழங்கப்பட்டுவிட்டதாகவும், அது மாற்றி தரப்படும் என்று கூறியதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், இதை மறுத்துள்ள மாணவர் ரஹீம், பிஹெச்டி பட்டத்தை மாற்றி தருவது நடைமுறையில் இல்லாதது, என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.