இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவின்குமார் அபிநபு இ.கா.ப தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திஸ், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ் உட்பட பல காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்