அரசியல்செய்திகள்

உலக வங்கி ஒப்புதல் : 150 மில்லியன் டாலர் உதவி

சென்னை மாநகரத்தை உலகத் தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (1,100 கோடி ரூபாய்) கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கடன் தொகை மூலம் கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சென்னை நகர கூட்டு முயற்சி திட்டமானது உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுடன் செயல்படுத்தப்படும் என்றும், இரண்டு நிதியுதவி நிறுவனங்களின் நிதி மற்றும் அரசின் சொந்த நிதியில் இருந்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இரு நிறுவனங்களும் தலா 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘போக்குவரத்து திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும். சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் ( MTC) உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளிடம் இருந்து 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறும். இதேபோல், குடிமை அமைப்பு (civic body) இரு நிறுவனங்களிடமிருந்தும் தலா 20 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறும்.

இந்த திட்டங்களை முதலில் அரசின் அரசின் நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படும். பின்னர், முன்னேற்றத்தின் அடிப்படையில் உலக வங்கி நிதியை வெளியிடும்.’என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

சமீபத்தில், முன்முயற்சியை முன்னெடுப்பதற்காக மாநில அரசாங்கத்துடன் பல சுற்று விவாதங்களை நடத்திய பிறகு, உலக வங்கி நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்தது. சுமார் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் செயல்படுத்தப்பட உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button