திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை, உயர்ந்து விட்டது. மேலும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. ஆகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் தொடங்கி காமராஜர் சிலை வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்டெல்லா, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முகமது சித்திக், முன்னாள் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்