“தமிழக தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி கட்டாயம்” அரசாணை வெளியீடு
தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய இரு நிலைகளைக் கொண்ட தேர்வுகளை தமிழ் மொழி தகுதித் தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறும். குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் மொழி மட்டுமே மதிப்பீடு தேர்வாக இருக்கும்.
தமிழ் மொழி தெரியாதவர்கள் தமிழகத்தில் அரசுப் பணியில் சேர்வதை தடுக்க கட்டாய தமிழ் தேர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் இனி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும்.
தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் மொழி தேவை கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் அரசு வேலை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.