ஸ்ட்ராங்கான காதல் சாகாதது என நிரூபித்த 65
காதலுக்கு வயசில்லனு சொல்லுவாங்க ஆனா இவங்களோட காதலுக்கு வயசு 35. 35 வருஷத்துக்கு அப்புறமா ஒரு லவ் சக்சஸ் ஆயிருக்கு. அது யாருடைய லவ் ஸ்டோரினு பாக்றீங்களா? தனது 65 வயது காதலியை மணந்த காதலன்.
மைசூரில் உள்ள ஹெப்பாலை சேர்ந்த சிக்கண்ணா மற்றும் ஜெய்யம்மா இருவரும் பல வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் கைகூடும் நிலை ஏற்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று இந்த தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது.
ஜெயம்மாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தினால் அவரின் கணவர் அவரை விட்டு சென்றுவிட்டார். அப்பொழுது ஜெய்யம்மாவிற்கு 30 வயதுதான். அந்தப் பகுதியைச் சேர்ந்த சிக்கண்ணாவிற்கு ஜெய்யம்மாவின் மீது காதல் ஏற்பட்டது. ஆனால் ஜெய்யம்மா அதை ஏற்க மறுத்துள்ளார்.
பலமுறை சிக்கண்ணா தன்னை திருமணம் செய்ய கோரியும் ஜெய்யம்மா மறுத்துவிட்டார். தனது காதலுக்காக சிக்கண்ணா வேறு திருமணம் செய்து கொள்ளாமல் ஜெய்யம்மாவிற்காக காத்திருந்தார். இறுதியாக அவரின் காதலை ஏற்று ஜெய்யம்மாவிற்கும் சிக்கண்ணாவிற்கும் நேற்று சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இவர்களுடைய திருமணம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சாலுவராயசுவாமி கோவிலுக்கு எதிரே உள்ள ஸ்ரீனிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில் வைத்து சம்பிரதாய முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. 35 ஆண்டுகளாக காத்திருந்த 65 வயதுடைய சிக்கண்ணா விற்கும் அவருடைய காதலி ஜெய்யம்மாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தம்பதிகள் சிறப்புடன் வாழ வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். காதலிக்காக 35 வருடங்கள் காத்திருந்து கரம்பிடித்த அந்தக் காதலருக்கும், அவரது கொடுத்து வைத்த மனைவிக்கும் நம்முடைய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.