விவசாயிடம் லஞ்சம் : மின் உதவி பொறியாளர் கைது
திருமங்கலத்தில் விவசாயியிடம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
மதுரை திருமங்கலம் அடுத்துள்ள பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டு ராஜா இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் இவரது நிலத்திற்கு மின்சாரம் பெறுவதற்காக மின் உதவி பொறியாளர் முகமது உபேஷ் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் வந்தது.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் சூர்யா தேவி , கண்ணன் உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர் அதில் லஞ்சம் பெற்றது உறுதியானதை தொடர்ந்து மின் உதவி பொறியாளர் கைது செய்தனர்.
செய்திகள் : நீதிராஜன், மதுரை