தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவால் காலமானார்…
தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நல குறைவால் காலமானார்.ஆந்திர மாநிலம் , குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர் ரோசய்யா (88).வணிகவியல் பயின்ற ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேலவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவின் பல அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார். ஆந்திர அரசியலிம் நீண்ட அனுபவம் கொண்ட ரோசய்யா 2009 ம் ஆண்டு ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்தார். மேலும், 2009 முதல் 2016 வரை தமிழகத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.