“என்னையா!!பணம் இருக்கும்னு பாத்தா பழம்தான் இருக்கு” முதியவர் பையை திருடிய இளைஞன் …
பட்டப்பகலில் முதியவரின் கை பையை பிடிங்கிக் கொண்டு ஓடிய திருடன் பையில் பணம் இல்லை பழம் தான் இருந்து தெரிந்து ரோட்டில் தூக்கி எரிந்து விட்டு ஓட்டம் .திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைப்பு.
திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் மஞ்சள் பையை கையில் வைத்துக் கொண்டு டி அருந்தியுள்ளார். இதனை பார்த்த ஒரு சிறுவன் பெரியவரின் கையில் வைத்திருந்த துணிப்பையை பிடுங்கி கொண்டு ஓடிய திருடன்.
அப்பகுதியில் உள்ள மக்கள் அவனைத் துரத்தி ஓடிய பொழுது மஞ்சள் பையை பணம் இல்லை அதில் பழங்கள் இருப்பதை பார்த்து ஏமாற்ந்த திருடன் துணிப் பையை தூக்கி எறிந்துவிட்டு பெரிய கடை வீதி செல்லும் ரோட்டில் ஓடியுள்ளான். பொதுமக்கள் விடாமல் அவனை துரத்தி பிடித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில் தான் சேலத்தை சேர்ந்தவன் தனது பெயர் விக்கிரமன் (வயது 18) என திருடன் தெரிவித்துள்ளான். திருடனை மேலும் விசாரிக்க திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பட்டப் பகலிலே பையை தூக்கி ஓடிய திருடனை விரட்டி பிடித்த பொதுமக்களின், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : P.பழனிமுத்துக்குமார், திண்டுக்கல்