நேபாளத்தில் வெள்ளிப் பதக்கத்தை தட்டி தூக்கிய திண்டுக்கல் மாணவர்கள்……
நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ-நேபாள் இளைஞர்கள் விளையாட்டு போட்டியில் திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இன்று திரும்பினார், ரயில் நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய இந்தோ-நேபாள் இளைஞர்கள் விளையாட்டு போட்டிநேபாளம் நாட்டில் உள்ள பொகராவில் நடைபெற்றது. 29 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்தியாவை சேர்ந்த 12 பேர் கலந்து கொண்டனர்.
அதில் திண்டுக்கல்லை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கார்த்திக் கிருஷ்ணா(23), பிரவீன் குமார் ராஜா (22), துளசி ராஜ்(18), சந்தோஷ்(18), ராஜ் கபில்(18), கவின்குமார்(18) ஆகியோரும் கலந்துகொண்டு விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றனர். இன்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வெள்ளிப்பதக்கம் பெற்று திரும்பி வந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர், இந்த வெற்றி மூலம் அடுத்தகட்டமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு மேலும் பதக்கங்கள் பெற்று திண்டுக்கல் லுக்கு பெருமை சேர்போம் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்