
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ரூபாய் 156 லட்சம் மதிப்பிலான ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன், ஆரணி கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.