அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தும் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியின்றி தேர்வாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.