ஒமைக்ரான் ஆட்டம் ஆரம்பம் : மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு….
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதியானது. டெல்லியில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதியானது குறிப்பிடத்தக்கது.