“செவிலியர் காலி பணிகளை தரகர் இன்றி நிரப்பவேண்டும்” செவிலியர் சங்கம்….
கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை இடைத்தரகர் இன்றி வெளிப்படையாக நிரப்பவேண்டும் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்செவிலியர் சங்க மாநிலத் தலைவி நிர்மலா பேட்டி
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவி நிர்மலா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக் கிழமையை சனிக்கிழமை என்று மாற்றி உத்தரவிட்டதற்கும், கொரானா பணிக்கான ஊக்கத்தொகையை வழங்கியதற்கும் தமிழக முதல்வருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஊக்கத் தொகை வழங்குவதில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வழங்கப்படவில்லை. சரியான முறையில் கணக்கு அவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும். கொரானா தடுப்பூசி இரண்டாவது தவணை அதிகமாக போட வேண்டி இருக்கிறது. எனவே தற்காலிகமாக பயிற்சி பெற்ற செவிலியர்களை கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும்.
கிராம சுகாதார செவிலியர்களுக்கு 30 ஆண்டுகள் வரை பதவி உயர்விற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. எனவே 30 ஆண்டுகள் கழித்து வரக்கூடிய பதவி உயர்வும் மே மாதம் நடத்த வேண்டிய கலந்தாலோசனைக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. எனவே உடனடியாக பதவி உயர்விற்கான கலந்து ஆலோசனை கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்கள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிடவேண்டும்.
இடைத்தரகர்கள் இன்றி முறைப்படி, வெளிப்படையாக பதவி உயர்வுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் அதேபோன்று கிராம சுகாதார செவிலியர்கள் 30 ஆண்டுகள் வரை பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. 10 ஆண்டுகள் பணி முடித்த, 20 ஆண்டுகள் முடித்தவருக்கு அதற்குரிய ஊதிய உயர்வினை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான சீருடைபடி வழங்கப்பட வேண்டும். மருத்துவ படி, இலவச குடியிருப்பு, இலவச மின்சார வசதி வழங்க வேண்டும். சேதமடைந்த கட்டிடத்திற்கு வாடகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையம் என்பது தாய் சேய் நிலையமாகும். அந்த நிலையத்தில் தாய் சேய்க்கான சேவைதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தற்போது புதியதாக ஒரு எம்எஸ்வி இடைநிலை சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமனம் செய்த உள்ள அந்த இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு தனியாக ஒரு கட்டிடம் ஒதுக்கித் தர வேண்டும். ஆனால் தேவையற்ற முரண்பாடுகள், தேவையற்ற குழப்பமும் ஏற்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசுக்கும் அமைச்சருக்கும் வழங்க இருப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல், சென்னை திருச்சி மதுரை கோயம்புத்தூர் சேலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்