அரசியல்செய்திகள்
Trending

ஓபிஎஸ் ஈபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் : அமமுகவினர் மீது வழக்கு பதிவு : பதிலடி கொடுத்த டிடிவி தினகரன்!!

ஓபிஎஸ் ஈபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் : அமமுகவினர் மீது வழக்கு பதிவு : பதிலடி கொடுத்த டிடிவி தினகரன்!!

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாகனங்களை மறித்து தாக்குதல் நடத்தியதாக அமமுகவினர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன் என்பவர் அதிமுக அம்மா பேரவை துணை செயலாளராக உள்ளார் .

இவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார் .அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காமராஜர் சாலைக்கு வந்தனர் .

அப்போது தானும் மலரஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினேன் .அப்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில் , அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் சிலர் சட்ட விரோதமாக கையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் வாகனங்களை மறித்து முற்றுகையிட்டனர்.

மிகவும் மோசமான வார்த்தைகளால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி , கூச்சலிட்டு ஆவேசமுடன் முழக்கமிட்டுக் கொண்டே கற்களையும் , காலணிகளையும் , கட்டைகளையும் , கம்புகளையும் கொலை வெறியோடு வீசினார்கள் .அதில் , சில கற்களும் , செருப்புகளும் , கட்டைகளும் என் மேல் விழுந்தது . அதில் , எனக்கு இடது தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது.

என்னுடன் வந்த செங்கல்பட்டு மேற்கு எம் . ஜி . ஆர் . மன்றச் செயலாளர் ராஜப்பா அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது .எனவே , மேற்படி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு , சதித் திட்டம் தீட்டி , பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடி , ஆபாச வார்த்தைகளுடனும் , ஆவேசமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமமுகவினர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விட்டரில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி . டி . வி . தினகரன் , தங்கள் இயக்கம் ஜனநாயக ரீதியாக அரசியலை எதிர்கொள்ளுமே தவிர , வன்முறையில் எப்போதும் நம்பிக்கை கிடையாது என பதிவிட்டார்.

இந்நிலையில் அதிமுக பிரமுகரின் புகாரின் அடிப்படையில் , அமமுகவைச் சேர்ந்த பெயர் தெரியாத நபர்கள் மீது , ஆபாசமாக திட்டுதல் , பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல் , காயம் ஏற்படுத்துதல் , மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button