ஸ்கூட்டியில் கஞ்சா விற்பனை : மடக்கி பிடித்த சோழிங்கநல்லூர் காவல்துறை….
சென்னை மடிப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் காவல் நிலையம் பெரும்பாக்கம் சர்ச் அருகே உதவி ஆணையர் ப்ராங்களீன் ரூபன் அவர்களின் உத்தரவின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் வருவதை பார்த்து அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கஞ்சா விற்பனை செய்தனர் என்பது தெரியவந்தது. பிறகு அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாதவரத்தை சேர்ந்த எபிநேசர் (எ) காளிதாஸ், பள்ளிக்கரணையை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை பெரும்பாக்கம் ஆய்வாளர் கணகராஜன்,உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ரவிவர்மன்,காவலர் பிராகரன் ஆகியோர் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
செய்திகள் : ரமேஷ், சோழிங்கநல்லூர்