பாபர் மசூதி இடித்ததை கண்டித்தும் பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் பேகம்பூர் தபால் நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது கண்டித்தும், பாபர் மசூதி தீர்ப்ப்பினை, நீதிமன்றங்கள், சட்டம், ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை பார்க்காமல் புராணம் மற்றும் நம்பிக்கை வைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது கண்டிக்கதக்கது.
மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதி கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அருட்தந்தை பிலிப் சுதாகர், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் இர்பான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது ரசின் மற்றும் பெண்கள் ஆண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்