மதுரை ஆட்சியர் வாகனத்தை மறித்து தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு
மதுரை அண்ணா நகரை சேர்ந்த அச்சப்பன், திவ்யா தம்பதியினரிடம்மதுரையில் உள்ள பிரபல பிரியாணி கடையின் பங்குதாரர்கள் என தங்களை அறிமுகம் செய்து கொண்டு அருண்ராஜ், அன்பு செல்வன், மணிகண்டன் ஆகிய 3 பேர் சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியுள்ள உணவத்திற்கு தங்களை பங்குதாரராக சேர்த்து கொள்ள 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த தம்பதி பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்காமல் மோசடி செய்ததால் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர கோரி பலமுறை மதுரை காவல் ஆணையாளர் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அச்சப்பன், திவ்யா தம்பதி மதுரை வைகை ஆற்றில் ஆய்வு பணிக்கு கிளம்பி சென்ற ஆட்சியர் அனிஷ் சேகர் காரை மறித்து ஆட்சியர் முன்பாக வழிமறித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள் : பா.நீதிராஜன், திருமங்கலம்