ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
எனவே மணிகண்டனை தேடி பிடித்த காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணை முடிந்து மணிகண்டன் வீடு திரும்பியவுடன் திடீரென்று உயிரிழந்துள்ளார். எனவே மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதால் தான் அடிபட்டு மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். மணிகண்டனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால் அவரது உறவினர்கள் யாரும் உடலை வாங்கவில்லை. எங்களுக்கு ஒரு கோடி இழப்பீடு கொடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். தற்போது மாணவர் மணிகண்டன் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்றது.