மதுரை : அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் பேரணி : 50க்கும் மேற்பட்டோர் கைது!!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 64 வது நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தை கட்சியினர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் அனுமதியின்றி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பேரணி நடத்தியதால் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர் . இந்நிகழ்ச்சியை திருமங்கலம் ஒன்றிய தெற்கு செயலாளர் பழக்கடை தலைமையில் நடைபெற்றது. மற்றும் திருமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆட்டோ சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் கலைச்செல்வம, திருமங்கலம் தொகுதி செயலாளர் தமிழ் செல்வம் ,திருமங்கலம் தொகுதி துணை செயலாளர் முத்துகுமார் ,நகர செயலாளர் ஈஸ்டர் ரவி, பொருளாளர் மருதன், நகர செயலாளர் கபிலன்(எ) என்ற கருப்பையா ஆகியோர் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்து பேரணி நடத்தினர்.
அப்போது காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி வாங்காமல் பேரணி செய்ததால் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை கைது செய்ய முற்பட்டனர். அதற்கு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால் காவல்துறைக்கும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
செய்திகள் : பா.நீதிராஜன், திருமங்கலம்