வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்த சொந்த சகோதரியை, தலையை துண்டித்து கொலை செய்த 17 வயது சிறுவனான சகோதரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், காதல் திருமணம் செய்து கொண்டதற்காக சொந்த சகோதரியை, 17 வயது சிறுவனான சகோதரனே வெட்டிப் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்காபாத் மாவட்டத்திற்குட்பட்ட லட்கான் கிராமத்தை சேர்ந்த 19 வயது சகோதரியை, 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலை துண்டிக்கப்பட்ட தனது சகோதரி தலையுடன் அந்த சிறுவனும், தாயும் செல்பி எடுத்துக் கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த சிறுவனையும் அவரின் தாயையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, மராத்தி திரைப்படம் ஒன்றில் நடந்த சம்பவத்தை போல் அந்த சிறுவன் இப்படி ஒரு கொலையை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட இளம்பெண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி 20 வயதான காதலன் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அந்த கிராமத்திலேயே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களின் திருமணம் கலப்பு திருமணம் எதுவும் இல்லை என்ற போதிலும், தனது சகோதரி வீட்டை விட்டு ஓடியதால் அவமானம் அடைந்து விட்டதாக அந்த 17 வயது சிறுவன் எண்ணி இந்த கொலையை செய்ததாகவும், இதற்க்கு தாயும் அந்த சிறுவனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அதன்படி சகோதரியின் வீட்டுக்கு சென்ற சகோதரனும், தாயும் சமாதனம் செய்ய முயன்றுள்ளனர். பின்னர் தாய்க்கும், சகோதரனுக்கும் டீ போட்டுக் கொடுத்த சகோதரியை, அவர் எதிர்பாராத நேரத்தில் ஒரே போடாக அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
மேலும் அந்த சகோதரியின் கணவரை கொலை செய்ய சிறுவன் முயற்சி செய்துள்ளான். ஆனால், அவர் தப்பித்து ஓடி உயிர் பிழைத்துள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் கர்ப்பிணியாக இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.