“BC மறவர்களை DNC ஆக்கு” மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு DNC சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்!!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிஎன்சி சீர்மரபினர் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலம் கிராம மறவர்கள் மற்றும் மதுரை மாவட்ட பகுதிகளில் உள்ள சீர்மரபினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக அவர்கள் கூறியதாவதுDNC சீர்மரபினர் பிரிவு இதில் மொத்தம் 63 சாதி உள்ளடக்கியது ஆகும். அதில் மறவர் சாதி ஒன்று மேலும் அருகில் உள்ள மாவட்டமான ராமநாதபுரம் தேனி திருநெல்வேலி உட்பட அனைத்து மாவட்டங்களில் சாதி சான்றிதழ் DNC வழங்கபடுகிறது.
மதுரை மறவர்க்கு மட்டும் இந்த சான்றிதழ் வழங்க மறுக்கபடுகிறது. ஆகையால் இன்று DNC பொது செயலாளர் தலைமையில் பொன்னமங்கலம் கிராம மக்கள் மதுரை மறவர்குளம் அனைவரின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. BC என்பது மொத்தம் 600 சாதி உள்ளடக்கியது.
இதில் சலுகையுடன் அரசு வேலை பெறுவது மிகவும் கடினம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சீர்மரபினர் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு இக்கோரிக்கையை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.
செய்திகள் : பா.நீதிராஜன், திருமங்கலம்