வால்பாறையில் அம்பேத்கர் அவர்களின் 65 வது நினைவு தினம்
வால்பாறையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் அண்ணார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வால்பாறை விடுதலை சிறுத்தை நகர செயளாலர் வீரமணி வேண்டுதலுக்கு இணங்க அனைத்து கட்சியின் சார்பாகவும் நினைவு அஞ்சலி கொண்டாடப்பட்டது.
இதில் திமுக நகர செயலாளரும் வழக்கறிஞருமான பால்பாண்டி வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பெருமாள் திமுக வர்த்தக அணி ஜே.பாஸ்கர் திமுக பொறுப்பாளர் ஈகா பொன்னுச்சாமி.
வால்பாறை மதிமுக நகர செயலாளர் கல்யாணி மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் மயில் கணேசன் தலைமையில் பொன் கணேசன் சௌந்தர் சசிக்குமார் வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவரும் தேயிலைத் தோட்ட தொழிற் சங்க கூட்டுக் குழு தலைவருமான சலாவூதீன் யூசுப் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்திகள் : கருப்பசாமி, வால்பாறை