Featured

வாட்ஸ்அப் செயலியின் கூடுதல் வசதி : செய்தியை தானாக அழிக்கும் வசதியில் கூடுதல் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பயனாளர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து தகவல்களும் ஒரு குறிப்பிட்ட அவகாசத்திற்கு பிறகு அழிந்துவிடும்படி தேர்வு செய்யமுடியும் . இந்த அவகாசம் 24 மணி நேரமாகவோ , 7 நாட்களாகவோ அல்லது 90 நாட்களாகவோ இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே , பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் 7 நாட்களுக்கு பிறகு அழிந்துவிடும் வகையில் தேர்வு செய்யும் முறை இருந்து வந்தது . இதில் ஒவ்வொரு நபரின் உரையாடலுக்கும் தனித் தனியாக தேர்வுசெய்து தகவல்களை அழிக்கும் முறை இருந்தது .

ஆனால் இனி அவ்வாறு இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் செய்திகள் அழிந்துவிடும்படி அமைத்துக் கொள்ளலாம் . இந்த வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் செயலியை நடத்தி வரும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button