சுற்றுலாசெய்திகள்

குற்றாலத்தில் குளிக்க அனுமதி !!

குற்றாலத்தில் குளிக்க அனுமதி !!

கொரோனா பாதிப்பு முதல் அலை காரணமாக 2019 மார்ச் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.மக்களின் வருகையை நம்பியுள்ள அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் குற்றாலம் கலைகட்ட போகிறது. வரும் 20முதல் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்டஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1.சுற்றுலாத் தலத்திற்கு வருகை தரும் பொது மக்களின் சுகாதாரமும், பாதுகாப்புமே முதன்மையானது.

2. பாதுகாப்பான, கிருமிநீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான சுற்றுப்புறம் பொது மக்களுக்கும், பணியாளர்களுக்கும் தயார் செய்யப்பட வேண்டும்.

3. குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியில் சுற்றுலா பயணிகள் நிறுத்தப்பட வேண்டும். இடைவெளியுடன் நிற்பதற்கு தேவையான இடங்களில் குறியீடு செய்யப்பட வேண்டும்

.4. காய்ச்சல் கண்டறியும் கருவியை (Thermal Scanner) பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் தவறாது காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட வேண்டும்.

5.தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், வழங்க வேண்டும்.பேரருவி: ஒரு நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள்ஐந்தருவி: ஒரு நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்பழைய குற்றாலம்: ஒரு நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்

6.காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை கூட்ட நெரிசல்களை தடுக்க குறிப்பிட்ட மணிநேரத்திற்கு மேற்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

7. நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் (Containment Zone) இருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருகை தவிர்க்க வேண்டும்

.8. போதுமான கிருமி நாசினிகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

9. கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள், சுற்றுலா தலத்திற்கான நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தேவையான இடங்களில் பதாகைகள் நிறுத்தியும், சுவரொட்டிகள் ஒட்டியும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

10.தொற்று சந்தேகம் உள்ள சுற்றுலாப் பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும்.

11. CCTV கேமரா மூலம் பயணிகள் வருகை கண்காணிக்கப்பட வேண்டும்.

12. பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அருவி அருகில் அமைந்துள்ள கடைகளில் தவறாமல் அரசினால் தெரிவிக்கப்பட்டது.

13.தென்காசி கோட்டாட்சித்தலைவர் குற்றால அருவிக்கு வரும் பொதுமக்கள் தங்கும் இடங்களான சிறிய / பெரிய விடுதிகள், உணவகங்கள், மற்றும் அருவிப்பகுதியில் அமைந்துள்ள கடை உரிமையாளர்களை அழைத்து அரசினால் தெரிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) பின்பற்ற வேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button